பி.எஸ். சுரானா தனது இளம் வயதிலிருந்தே பின்பற்றிய ஏழு கொள்கைகளின் அடிப்படையில் இந்த நிறுவனத்தை நிறுவினார். மேலும் நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த ஏழு கொள்கைகளை பின்பற்ற பயிற்சி பெற்றுள்ளநர். அதாவது:
நோக்கம்
எங்கள் வாடிக்கையாளர்களின் வெற்றிக்காக நாங்கள் இருக்கிறோம் - "அவர்களைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளை அழிக்க". அவர்களது சட்டப்பூர்வமான, நிதிநிலைக்குரிய, இயக்கத்திற்கான, மேலாண்மை செயல்பாடுகளுக்கு மதிப்பு சேர்க்க விழைகிறோம்.
தாமதமில்லா சேவை
பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம். பி.எஸ். சுரானா, வாடிக்கையாளர்களுக்கும் சமூகத்திற்கும் உடனடி பதில் மற்றும் விரைவான முடிவுகள் கிடைப்பதன்
முக்கியத்துவத்தை உணர்ந்தார். விரைவான பதிலுக்கு மிகைக் கட்டணம் உள்ளது.
நடைமுறை
குண்டு துளைக்காத கவசம் போல் உள்ள சட்ட நுணுக்கங்கள் இருந்தாலும், காலதாமதம் அதன் நோக்கத்தை கெடுத்துவிடும். இடைக்கால விண்ணப்பங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் சிறிய மற்றும் உடனடி இடைக்கால நிவாரணங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வாடிக்கையாளருக்கு நிதி ஓட்டம் மற்றும் செயல்பாட்டு மூலதனத்திற்கு உதவும். ஒரு தீர்வு வாடிக்கையாளரின் நலனுக்காக இருந்தால், தயக்கமின்றி வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறி, மேலும் "சிறந்த சூழ்நிலைகளில்" தீர்வை உறுதிப்படுத்த அவரை அல்லது அவளைப் வழிநடத்திச்செல்வது. நடைமுறையாகும்.
பொறுமையாய் காப்பது
பொறுமை எல்லா நற்பண்புகளுக்கும் தாய். வாடிக்கையாளரின் தரப்பை பொறுமையாக கேளுங்கள். விளைவுகளில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். அவசரப்படுவதைத் தவிர்க்கவும். “பொருமை மற்றும் நிலையானவர்” பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்.
இந்த கொள்கைகளினால் இந்த நிறுவனம் நேர்மை/ நம்பகத்தன்மை/ திறமை/ செயல்திறன் போன்றவற்றில் பெரும் புகழ் ஈட்டியுள்ளது. – டாக்டர் வினோத் சுரானா
தனிப்பட்ட கவனம்
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரவர் சேவையை எப்போதும் தனிப்பயனாக்குதல். "ஒரு அளவு அனைவருக்கும் பொருந்தும்"என்பது எப்போதும் சட்டத்தில் ஒவ்வாது. தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மிகவும் பயனுள்ளவை, பாராட்டப்பட்டவை மற்றும் வெகுமதி பெறக்கூடியவை.
துல்லியத்தன்மை
சட்ட நிறுவனங்களுக்கு துல்லியம் மிகவும் முக்கியமானது. (சிக்கலை) துல்லியமாக உணர்ந்து, உங்கள் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்துங்கள் (வாய்வழியாக & எழுத்துப்பூர்வமாக). இதற்கு அமைதியான மனம், விளைவுகளில் கூர்மையான கவனம் மற்றும் நிறைய வீட்டுப்பாடம் தேவை. எல்லாவற்றையும் எளிமையாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் வைத்திருப்பது வெற்றிகரமான வழக்கறிஞரின் பண்புகளில் ஒன்றாகும்.
கொள்கைகள்
கடைசி மற்றும் மிக முக்கியமான விஷயம் “தன்மை இழக்கப்படும்போது எல்லாம் இழக்கப்படுகிறது.” கோட்பாடுகள் மிக முக்கியமானவை. இந்த நிறுவனம் மது, புகையிலை, இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் சூதாட்டத் தொழில்களுக்கு வேலை செய்யாது.